வேறொருவருடன் உல்லாசம் அனுபவித்த அண்ணனின் மனைவி! அதை நேரில் பார்த்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!



young-boy-saw-illegal-affairs

 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அடுத்துள்ள கொத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் கலா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி,  இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் சங்கர் பெங்களூருவில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவர் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிற்கு வரும்படி இருந்துள்ளார்.

இந்த நிலையில் கலாவிற்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் புட்டப்பா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

illegal affairs

இந்த நிலையில்,  சங்கரின் தம்பி சதீ‌‌ஷ்குமார் என்ற சிறுவன். தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது கலாவும், புட்டப்பாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை  நேரில் பார்த்த சிறுவன் சதீ‌‌ஷ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளான். இந்த விஷயத்தை சதீ‌‌ஷ்குமார் வெளியில் சொல்லி விடுவான் என நினைத்து புட்டப்பாவும், கலாவும் சேர்ந்து சிறுவனை கொலை செய்தனர்.

பின்னர் சிறுவனின் உடலை யாருமில்லாத இடத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த கொலை தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி கள்ளக்காதல் ஜோடி புட்டப்பாவையும், கலாவையும் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், புட்டப்பா மற்றும் கலாவிற்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.