மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை..அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!
திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் காட்டூர் பகுதியை சேர்ந்த ராசி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அபிஷேக் கோபிசெட்டிபாளையத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். ராசி 2020ஆம் ஆண்டு மருத்துவம் படித்து முடித்துவிட்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இந் நிலையில் ராசி முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதன் காரணமாக அவர் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்ததாக தெரிகிறது.
இச்சூழலில் நேற்று ராசி தனது வீட்டின் மூன்றாவது மாடியில் சென்று படிக்கப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரது தாய் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது ராசி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து துடிதுடித்து கதறி அழுதார்.
பின்னர் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.