மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்!! ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்த இளம் டாக்டர் உயிரிழப்பு...
சென்னையில் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட இளம் டாக்டர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு இரவு 7.30 மணியளவில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். இங்கு பயிற்சி மேற்கொண்டிக்கும் போதே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அந்த உடற்பயிற்சி மையத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் அன்விதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அதனையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்விதாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அன்விதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.