மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயதில் ஏற்பட்ட காதலால் குடும்பத்தில் குழப்பம்; தாயும் மகளும் தற்கொலை முயற்சி: பரிதாபமாக உயிரிழந்த மாணவி..!
காதலால் ஏற்பட்ட குடும்ப தகராறில் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள செம்பராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி மதுராம்பாள். இவர்களது மகள் அபிநயா (16). இவர் சங்கராபுரம் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படித்து வந்தார்.
இந்த நிலையில், அபிநயா, அதே பகுதியை சேர்ந்த அஜித் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அபிநயா, அஜித்துடன் வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மதுராம்பாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தாய் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போனதை அறிந்து அபிநயா வேதனையடைந்துள்ளார். தனது தாயை பார்க்க சென்ற அபிநயாவை துரைராஜின் உறவினர்கள் வீட்டினுள் அனுமதிக்கவில்லை. இதனால் வேதனையடைந்த அபிநயா, அங்கே உள்ள மற்றொரு உறவினரின் வீட்டில் புகுந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அபிநயாவை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமானதால் மருத்துவர்கள் அறுவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துரைராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.