"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
எனது சாவிற்கு எனது கணவர் மற்றும் இவர்கள் தான் காரணம்!! வீடியோ வெளியிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...
திருப்பூரை அடுத்த செட்டிபாளையம், பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் - சொர்ண கலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிரது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் சுரேஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். கணவர் வீட்டில் இருந்து வெளியேறியதும் சொர்ணகலா தனது சாவிற்கு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என தனது செல்போனில் வீடியோ பதிவிட்டதோடு, தனது மகளை தனது பெற்றோர் மற்றும் தனது இரு தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி அந்த வீடியோவை தனது தோழிகளுக்கும், குடும்பத்தாருக்கும் அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் சொர்ணகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.