மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாம்பை பார்த்து பயந்து ஓடிய இளம்பெண்! கிணற்றில் தவறி விழுந்து பரிதாப பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாம்பை பார்த்து பயந்து ஓடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்ற இளம்பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டின் பின்புறம் நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கீதாவின் அருகில் ஒரு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப்பார்த்து அலறியடித்து ஓடியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த சங்கீதாவின் தாய் ஓடி சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தார். அவர்கள் கிணற்றில் இறங்கி சங்கீதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.