மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் நிச்சயமான இளம்பெண்! செல்பி மோகத்தால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், நவஜீவன் நகரைச் சேர்ந்த மெர்ஸி என்ற இளம் பெண்ணிற்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் இவர்கள் இருவரும், அருகில் இருக்கும் விவசாய நிலத்தில் தனிமையில் சந்தித்துள்ளனர்.
இருவரும் சந்திக்கும்போது விளைநிலத்தில் இருந்த கிணற்றிற்கு அருகே நின்று இருவரும் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது இருவரும் நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தனர்.
ஆனால் இரண்டுபேருக்குமே நீச்சல் தெரியாததால், மெர்ஸி சேற்றில் சிக்கிக்கொண்டார். அப்புவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இடத்தின் உரிமையாளர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸியை சடலமாக மீட்டனர். திருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் இளம்பெண் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.