மாப்ள.. இதை கொஞ்சம் பாருங்க.. புது மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த புகைப்படங்கள்.. ஆடிப்போன குடும்பத்தினர்..
பேஸ்புக் காதலனால் இளம் பெண்ணின் திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் பேஸ்புக் மூலம் நெருங்கி பழகிவந்துள்ளார். இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து, கண்ணன் பலமுறை மதுரை வந்து இளம் பெண்ணை தனிமையில் சந்தித்துள்ளார்.
மேலும் இளம் பெண்ணுடன் பல்வேறு புகைப்படங்களை அவர் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணிற்கும் கண்ணனுக்கும் இடையே நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அந்த பெண் கண்ணனை விட்டு விலகியுள்ளார். இந்நிலையில்தான் இளம் பெண்ணிற்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து, திருமண நாளும் வந்தது.
இந்நிலையில் இளம் பெண்ணை பழிவாங்குவதற்கா கண்ணன் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை போலியான முகநூல் கணக்கு மூலம் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கும் அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாப்பிளை, உடனே தனது குடும்பத்தினரிடம் கூறி திருமண வேலைகளை நிறுத்தியுள்ளார். மேலும் கண்ணனை தொடர்புகொண்டு விசாரித்தபோது, பெண்ணின் தந்தை தன்னிடம் பேசவேண்டும் எனவும், பணம் கொடுத்தால் அந்த புகைப்படங்களை நீக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உடனே இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார், சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் கண்ணனை இரண்டு மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமண வேலைகள் பரபரபராக நடந்துகொண்டிருந்தநிலையில், பேஸ்புக் காதலனின் மோசமான வேலையினால் இளம் பெண்ணின் திருமணம் நின்றுபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.