மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை தாலி கட்டி மனைவியாக்கிய காதலன்... தாலியை அறுத்து விரட்டியடித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த +2 மட்டுமே முடிந்திருந்த மாரீஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாரீஸ்வரியை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்று தாலி காட்டியுள்ளார் சசிகுமார். அதனையடுத்து மாரீஸ்வரியை அழைத்து கொண்டு நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் தென்காசி மாவட்டம் பாச்சேரி கிராமத்தில் உள்ள தனது சித்தி முனியம்மாள் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு போய் நடந்தவற்றை கூறி அழைத்து செல்வதாக மாரீஸ்வரியிடம் கூறி சென்றுள்ளார் சசிகுமார்.
பின்னர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே சசிகுமாரின் குடும்பத்தினர் முனியம்மாளுக்கு போன் செய்து உடனே அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறியுள்ளனர். அதனையடுத்து முனியம்மாள், மாரீஸ்வரியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளார்.
இதனால் மனமுடைந்த மாரீஸ்வரி தனது வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறி விட்டு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.