திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
25 வயதில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி பேராசிரியை..! 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்து உயிரை விட்டார்..!
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கனிமொழி (25). கனிமொழி தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கனிமொழி மீது கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கனிமொழி தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை வழங்கியும், கனிமொழி மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க கனிமொழியின் பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, கனிமொழியின் சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் ஆகியவை தனமாக பெறப்பட்டு 7 பேருக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டுள்ளது.