மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுக்கு எதிர்ப்பு.. இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்!
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் தனியார் மதுபான கடை அருகே உள்ள ஒரு விடுதியில் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் செல் போன் மூலமாக விவரங்களை சேகரித்தனர்.
இதில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன்படி உயிரிழந்த இளைஞர் சுபாஷ் என்பதும், உயிரிழந்த பெண் சபிதா என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் விடுதியில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.