#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோட்டத்திற்கு சென்ற 65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை மாடுகளை கவனிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 25 வயது வாலிபர் குடிபோதையில் வந்துள்ளார்.
இந்தநிலையில், அந்த நபர் திடீரென தான் அணிந்து இருந்த வேட்டியால் மூதாட்டியின் முகத்தை கட்டி கீழே தள்ளி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மூதாட்டி நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது மனைவியை ஆம்புலன்சு மூலமாக மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதனையடுத்து மூதாட்டியின் கணவர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சென்று பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.