மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே பயங்கரம்.!! வாலிபருக்கு அரிவாள் வெட்டு.!! மர்ம கும்பல் தலை மறைவு.!!
திருச்சி மாவட்டம் லால்குடியில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். 21 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இன்று காலையில் வெங்கடேஷ் பூவாளூர் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் வெங்கடேசை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் முன் பகை காரணமாக வெங்கடேஷ் மீது தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் முகேஷ் என்பவருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முகேஷ் தனது நண்பர்களான மனோஜ், பிரேம் மற்றும் தமிழ்மாறன் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசை கொல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.