அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பள்ளி மாணவியை ஏமாற்றி உல்லாசம்.. பணம் பறித்த இளைஞருக்கு வலைவீச்சு!
சென்னை ஆவடி அருகே உள்ள திருநின்றவூரை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கு, 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் பட்டபிராமில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதில் இவரது தாய் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி பேஸ்புக் மூலமாக திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த அருண்குமார் அம்பத்தூர் அருகே பாடியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி வெளியே அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் சிறுமியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி மற்றும் அக்கவுண்டில் வைத்திருந்த 50,000 பணத்தையும் ஆட்டையை போட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் உனது தாயை கொலை செய்திடுவேன் என அருண்குமார் மிரட்டல் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அருண்குமாரின் தொல்லை தாங்க முடியாது தான் சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பட்ட கிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அருண்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.