#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாய் மது குடிக்க பணம் தராததால் மகன் எடுத்த விபரீத முடிவு... காவல்துறை விசாரணை.!
மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கங்குடி என்னும் கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .
வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த பவுனம்மாள் என்பவரது மகன் ரகுபதி வயது 25 மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடிப்பதையே வழமையாக கொண்டிருந்திருக்கிறார். மேலும் தனது தாயிடம் பணம் வாங்கி அடிக்கடி மது குடித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக தாய் மற்றும் மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார் ரகுபதி. அவரது தாய் பவுனம்மாள் பணம் கொடுக்காததால் விரக்தியில் அந்த இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இந்த சம்பவம் தொடர்பாக பவுனம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.