மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் தோல்வியால் நள்ளிரவில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு... கதறி துடிக்கும் பெற்றோர்!!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு - சுமித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா(22) என்ற மகன் உள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் உபயோகித்துள்ளார். இதனால் கோபமான சுரேஷ்பாபு மகனைக் கண்டித்துள்ளார். அதனை அடுத்து அன்று நள்ளிரவில் திடீரென ஸ்ரீ ராமகிருஷ்ணா வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணாவின் பெற்றோர் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறைத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் ஸ்ரீ ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் ராமகிருஷ்ணா இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி அந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காதல் தோல்வி அடையவே ஸ்ரீ ராமகிருஷ்ணன் எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.