மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரிதாபம்... இயந்திரத்தில் சிக்கி பலியான இளைஞர்... உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு.!
திண்டுக்கல் மாவட்டத்தில் நூற்பாலை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஷ்ணு பிரகாஷ் (வயது 22).. இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி சுமித்ரா என்ற மனைவி இருக்கிறார். விஷ்ணு பிரகாஷ் வேடசந்தூர் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் பணிக்கு சென்றபோது நூற்பாலை இயந்திரத்தில் அவரது கை சிக்கி இருக்கிறது. இதில் அவர் அலறி துடித்த சத்தத்தை கேட்டு சக ஊழியர்கள் இயந்திரத்தை உடனடியாக நிறுத்திவிட்டு அவரை மீட்டுள்ளனர். ஆனாலும் கை சிக்கியதில் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் விஷ்ணு பிரகாஷ். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஷ்ணு பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வந்த அவரது உறவினர்கள் விஷ்ணு பிரகாஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நூற்பாலை நிறுவன அதிகாரிகள் அவரது குடும்பத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு பிரகாஷின் உடலை இறுதிச் சடங்கிற்கு அவரது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.