மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவியை மிரட்டி கட்டாய திருமணம்.. இளைஞர் போக்சோவில் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவர் சென்னை சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பூபதி செய்யாறு பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
மேலும், அந்த மனைவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவரை மிரட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டாய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பூபதியிடம் கேட்டபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பூபதியை கைது செய்தனர்.