மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடிய 24 வயது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்... அரியலூர் அருகே பரபரப்பு!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தை தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசீலன்(24). இவர் தனியார் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிறு கிழமை விடுமுறை தினம் என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களான மார்ட்டின், ஆரோக்கியதாஸ் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாடியுள்ளார்.
கிட்டிப்புல் விளையாடும் போது மார்ட்டின் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவருடன் குணசீலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து மற்ற நண்பர்கள் சேர்ந்து இரு தரப்பினரை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று இரவு அனைவரும் சேர்ந்து பேசி கொண்டிருந்த போது மீண்டும் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் மார்ட்டின் தனது வண்டியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசீலன் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து குணசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற நண்பர்கள் மார்ட்டின் உடன் வந்த ஆரோக்கியதாஸை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த ஆரோக்கியதாஸை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மார்ட்டினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.