மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் மனைவிக்கு, பழச்சாறில் மயக்கமருந்து கலந்து துஷ்பிரயோகம் செய்த கொடூரன்!.
திருவள்ளூரை சேர்ந்த சிலம்பரன் என்பவருக்கு மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிலம்பரனின் நண்பரின் மனைவி அவர் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அப்போது சிலம்பரனின் மனைவி வீட்டில் இல்லாத நிலையில் சிலம்பரன் மட்டுமே இருந்துள்ளார்.
இதையடுத்து பழச்சாறில் மயக்கமருந்து கலந்து நண்பரின் மனைவிக்கு சிலம்பரன் கொடுத்துள்ளார். மயக்கமடைந்த நண்பனின் மனைவியை துஷ்பிரயோகம் செய்ததோடு அதை வீடியோவும் எடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியே நண்பனின் மனைவியை பலமுறை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் சிலம்பரன்.
இதனால் நண்பரின் மனைவி கர்ப்பமாகி சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சிலம்பரனை கைது செய்துள்ளனர்.