மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்துடன் ஓட்டல் அறையில் தங்கிய கணவன்! அதிகாலையில் ஓட்டல் ஊழியர்கள் கண்ட பேரதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை ஜாதகம் பார்க்கும் தொழில் செய்துவந்துள்ளார். பிரகாஷ் நிகிதா என்ற பெண்ணை மணந்து அவருக்கு நான்கு வயதில் மகன் ஒருவன் இருக்கின்றான்.
இந்தநிலையில் நிகிதா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தால் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவருடன் பிரகாஷ் மைசூர் ஓட்டலில் சில நாட்களாக தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில், பிரகாஷ் தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இறந்துகிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.