#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரை இழந்து குழந்தையுடன் தவித்த இளம்பெண்.! நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி அரங்கேற்றிய அதிர்ச்சி காரியம்!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வந்தவர் நிர்மலா . 24 வயது நிறைந்த இவரது கணவர் மலர்வண்ணன். அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஹரிதா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கணவன் இறந்ததாள் நிர்மலா தினகூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு வந்துள்ளார். மேலும் அவரது மகள் ஹரிதா தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் அவரை கவனித்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மேலும் குழந்தையை எப்படி வளர்ப்பது, படிக்க வைப்பது என்பதை எண்ணி எண்ணியே நிர்மலா பெரும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இரவில் நிர்மலா தனது மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு ஊட்டியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை ஏரியில் அவர்கள் உடல்கள் மிதப்பதை கண்ட சிலர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.