மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலம் இப்படி கெட்டு கெடக்கு... 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை... இளம்பெண் போக்சோவில் கைது.!
பிளஸ்-1 மாணவனை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வழக்கில் இளம் பெண் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் வீட்டிற்கு அருகே 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார்.
இந்தப் 16 வயது மாணவனுக்கு அந்த பெண் உறவு முறை. இருவரது வீடுகளும் அருகில் இருப்பதால் அந்த பெண்ணின் வீட்டிற்கு இந்த மாணவன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு சோர்வாக இருந்திருக்கிறார். இது தொடர்பாக அவரது பெற்றோர் விசாரித்த போது கடந்த மூன்று மாதங்களாக இளம் பெண் தன்னை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். புகாரை விசாரித்த காவல்துறையினர் அந்தப் பெண்மணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.