திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாலையோர புதரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய இளம் பெண்.... பெற்றோர் பரபரப்பு புகார்.!
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இளம் பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (38). இவருக்கும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே வரதட்சனை கேட்டு சோமசுந்தரம் குடும்பத்தினர் சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இடையமேலூர் அருகே உள்ள சாலையோர புதரில் உள்ள மரத்தில் சந்தியா பிணமாக தூக்கில் தொங்கி உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் பெற்றோர் சோமசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் சந்தியாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சந்தியாவின் இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.