மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அய்யோ நான் உன்னைய இப்படியா பாக்கனும்... ஈஷா யோகா மைய பயிற்சிக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு... கதறும் கணவர்!!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிக்குமார் - சுபஸ்ரீ தம்பதியினர். சுபஸ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக செல்வதாக கூறி சென்றுள்ளார். அதனையடுத்து பயிற்சி முடிந்த நிலையில் சுபஸ்ரீயை அழைத்து செல்ல அவரது கணவர் கடந்த 18 ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் தான் சுபஸ்ரீ மாயமானது பழனிகுமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் இது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் 6 தனிப்படைகள் அமைத்து சுபஸ்ரீயை தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று செம்மேடு பகுதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது கிணற்றில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது சுபஸ்ரீயாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பழனிகுமாரை அழைத்துள்ளனர். அந்த சடலம் காணாமல் போன சுபஸ்ரீ தான் என்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சுபஸ்ரீ உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.