"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
காதலை கண்டித்த பெற்றோர்.. கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.!
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் விஜி தனது அம்மா மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த விஜி கடந்த 7ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் விஜி சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.