#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேஸ்புக்கில் மலர்ந்த காதல்! ரகசியம் அம்பலமானதால் எஸ்கேப்பான இளைஞர்! பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மலேசியாவில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி. 45 வயது நிறைந்த அவர் பேஸ்புக்கில் பல பெயர்களில் உள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் விக்னேஸ்வரிக்கு தேனியை சேர்ந்த அசோக்குமார் என்ற 20 வயது வாலிபருடன் நட்பு மலர்ந்து பின் அதுவே காதலாக மாறியது.
இந்நிலையில் விக்னேஸ்வரியின் வயது தெரியவந்ததும் அசோக்குமார் அவரைவிட்டு விலகியுள்ளார். ஆனால் விக்னேஸ்வரி அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கொலை செய்ய கூலிப்படையையும் ஏவியுள்ளார். அவர்கள் அனைவரும் போடியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
அப்பொழுது விடுதியில் சந்தேகப்படும்படி இருந்த அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அசோக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. மேலும் குட்டி என்ற சோணைமுத்து என்பவர் கூலிப்படையை ஏற்பாடு செய்தது கண்டறியப்பட்டது, இதனை தொடர்ந்து அனைவரையும் கைது செய்த போலீசார்கள் சிறையில் அடைத்தனர்.
மேலும் மலேசிய தூதரகம் மூலம் விக்னேஸ்வரியை பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.