மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்லம் இங்க வாடா... ஆசையாக பேசி ஆபாச வீடியோக்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை... திருச்சி அருகே பரபரப்பு!!
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கந்தசாமி மற்றும் அவரது மனைவி கூலி வேலை செய்து வந்துள்ளனர். தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்வதால் விடுமுறை தினங்களில் சிறுமி மட்டும் வீட்டில் தனிமையில் இருப்பது வழக்கம்.
அதேபோல் கடந்த மாதம் அரையாண்டு விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்கு ஊட்டி குன்னூர் பரலையாறு பகுதியை சேர்ந்த முரளிதரன்(21) என்ற இளைஞர் விருநதுக்காக வந்துள்ளார்.
முரளிதரன் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் செல்லமாக பேசியும், விளையாடியும் வந்துள்ளார். இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட முரளிதரன் விடுமுறை தினத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆபாச படங்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற சிறுமி சக மாணவிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இவை வகுப்பு ஆசிரியர் காதுக்கு செல்லவே அவர் சிறுமியின் பெற்றோரான கந்தசாமியை அழைத்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் முரளிதரனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.