மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமி கடத்திச் சென்று திருமணம்... இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மளிகை கடைக்காரர் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் மளிகை கடை ஒன்றில் நாகர்கோவிலை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி மதன் ராஜ் அந்த சிறுமியை தனது சொந்த ஊருக்கு கடத்திச் சென்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை மதன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.