திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருவிழாவிற்கு சென்ற இளைஞர்களுக்குள் கைகலப்பு; துணையாக சென்ற இளைஞர் பலியான பரிதாபம்...!
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர்களுக்குள் நடந்த மோதல் தொடர்பாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்புசாமி. இவரது மகன் அரவிந்த்(28). இவர் எம்.இ படித்துள்ளர்.மேலும் இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவரது உறவினரான பனையம்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யா(20) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் நஞ்சைகாளகுறிச்சியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார்.
அப்போது, சூர்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக ராஜாபுரம் பகுதியை சேர்ந்த மதன்(25), அபிஷேக் உள்ளிட்ட மூன்று பேர், சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் பகுதிக்கு, சூர்யாவை வரவழைத்துள்ளனர்.
அப்போது சூர்யாவுக்கு துணையாக, அரவிந்தும் வந்துள்ளார். பேச்சுவார்த்தையின்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அப்போது, மதன், அபிஷேக் உள்ளிட்டோர், உருட்டு கட்டையினால் சூர்யா மற்றும் அரவிந்தை சரமாரியாக அடித்துவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் மதன், அபிஷேக் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.