மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணியுடன் கள்ள உறவு... பிறந்தநாள் பரிசு தருவதாக அழைத்துச் சென்று அண்ணன் கொலை.!
அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அண்ணனை அவரது பிறந்த நாளன்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி மற்றும் சித்தி மகன் ஆகியோரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(24) இவரும் யாமினி(20) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் விக்னேஷின் சித்தி மகனான சதீஷ்(22) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தேரி கிராமத்தின் விநாயகபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு சென்ற விக்னேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இன்று காலை மாந்தோப்பு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
காவல்துறையின் விசாரணையில் விக்னேஷின் மனைவி யாமினியும் அவரது சித்தி மகனான சதீஷும் கள்ள தொடர்பில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதற்கு இடையூறாக இருக்கும் விக்னேஷை தீர்த்துக்கட்ட அவருக்கு பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி அழைத்துச் சென்ற சதீஷ் அவரை கொலை செய்தது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட விக்னேஷுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஆன இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது .