பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
அண்ணன்-தம்பி சண்டையில் தங்கையின் தாலியை பறித்த கொடூரம்.. தேனியில் நடந்த பயங்கரம்.. பறிபோன உயிர்.!
கம்பம் அருகே சகோதரர்கள் சண்டையை விலக்கி விட்டுச்சென்ற மச்சான் மைத்துனரால் கொலை செய்யப்பட்ட நிலையில், வழக்குக்கு பயந்து மைத்துனர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கிராமசாவடி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற 25 வயது மகனும், சங்கர் என்ற 22 வயது மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். சங்கீதாவுக்கு பேரையூரை சேர்ந்த காளிராஜ் (வயது 31) என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்து மாமனார் வீட்டருகே கணவருடன் வசித்து வருகிறார்.
தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத நிலையில், சிவகுமார் மற்றும் சங்கர் டைல்ஸ் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சிவகுமார் - சங்கர் இடையே ஏற்பட்ட சண்டையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது, மாமனார் வீட்டிற்கு வந்த காளிராஜ், தனது மைத்துனர்களை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, சங்கர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் எதிர்பாராத விதமாக காளிராஜை குத்தியுள்ளார். படுகாயமடைந்த காளிராஜ் மீட்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குகிறார்கள் என்ற செய்தி அறிந்த சங்கர், வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.