மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்... கொலையா .? தனிப்படை அமைத்து விசாரணை.!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் முத்தையா கத்தி குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .
இதனைத் தொடர்ந்து இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த வழக்கில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முத்தையா மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
மேலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் பலத்தை எதிர்ப்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக முத்தையா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் . இதனைத் தொடர்ந்து முத்தையாவின் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.