மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலர் தினம் கொண்டாட ஆடு திருடிய இளைஞர்கள் கைது... விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்...!
காதலர் தினம் கொண்டாட ஆடு திருடிய இளைஞர்கள்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு இரண்டு இளைஞர்கள் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர்.
ஆட்டினை திருடி செல்வதை கண்ட ரேணுகா கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டினை திருடிச் சென்ற இளைஞர்கள் அரவிந்த் குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20), இருவரையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் இளைஞர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்க கல்லூரி மாணவர் அரவிந்திடம் பணம் இல்லாத காரணத்தால், ஆடு திருடியதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து காவல்துறையினர்இரு இளைஞர்களை கைது செய்து அவர்களது பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் ஆடு திருட்டு தொடர்ந்து நடந்து வருவதால் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்று விசாரனை செய்து வருகின்றனர்.
காதலர் தினம் கொண்டாட இளைஞர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.