மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த கையோடு யூடியூபர் இர்பானுக்கு வந்த சட்ட சிக்கல்; கார் மோதி மூதாட்டி பரிதாப பலி.!
தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலம்-வெளிநாடுகளில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம், சுவை குறித்த விடியோவை வெளியிட்டு பிரபலமானார். இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், அவருக்கு சொந்தமான சொகுசு கார் மோதியதில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பத்மாவதி என்ற வயோதிக பெண்மணி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலேயே கார் இர்பானுடையது என்பது தெரியவந்தது.
காரை இயக்கி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக அசார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்துகையில் காரில் இர்பான் இருந்தாரா? என்ற தகவல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கான காரணம் என்பது உறுதியாகியுள்ளது.