திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Tamizha Tamizha: ஜீ தமிழில் மீண்டும் ஒளிபரப்பாகிறது தமிழா தமிழா.. தொகுப்பாளராக அசத்தப்போகும் ஆவுடையப்பன்.. விபரம் உள்ளே.!
பலரும் எதிர்பார்த்த தமிழா தமிழா நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 நவம்பர் மாதம் முதல் வாரம் ஒருமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.
மொத்தமாக இந்நிகழ்ச்சியில் 185 வாரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் தான் விலகுவதாக அறிவித்து வெளியேறினார்.
இந்த நிலையில், ஜூலை 16, 2023 முதல் தமிழா தமிழா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்யும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, அதனை தொகுத்து வழங்க ஆவுடையப்பனை தேர்வு செய்துள்ளது.
இதற்கான ப்ரோமோ வெளியிட்டுள்ளதால், தமிழா தமிழா நிகழ்ச்சியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஞாயிறுக்கிழமை மதியம் 12 மணியளவில் தொடர் ஒளிபரப்பு செய்யப்படும்.