வரவேற்பை பெற்ற ஆப்பிள் ஏஐ ஐபோன் 16.. கேமிராவில் இதனை கவனிச்சிங்களா?.!



Apple iPhone 16 AI Mobile Camera 

ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளில், மிகப்பெரிய அளவு உலகளவில் எதிர்பார்க்கப்பட்டது ஐபோன் 16. சாம்சங் ஏஐ ஸ்மார்ட்போனுக்கு பின்னர், ஆப்பிள் நிறுவனம் ஏஐ போனை விரைவில் வெளியிடுவதாக அறிவித்தது.

நேற்று அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு வகையில் ஆப்பிளின் ஏஐ ஸ்மார்ட்போன் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் புதிய அம்சமாக, பக்கவாட்டில் இருக்கும் கேமிரா கண்ட்ரோல் கெபாசிட்டி ஸ்லைடர் அமைப்பு, ஐபோனை எதிர்பார்த்தவர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: ஜி-பேயில் ஹேக்கிங்? யுபிஐ பயனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.! 

மேலும், 5x அளவிலான ஆப்டிகல் ஜூம் அம்சமும் இருக்கிறது. இந்த ஸ்லைடரின் வாயிலாக கேமிராவை சூம், க்ளிக், ஆன்/ஆப் செய்ய இயலும். ஆப்பிளின் இன்டெலிஜென்ஸ் அமைப்பும் கேமிராவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால், போட்டோ, வீடியோ ஆகியவை ஏஐ மூலமாக தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.