மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Mobiles Under Rs.15,000/- ரூ.15 ஆயிரத்திற்குள் அட்டகாசமான 5ஜி மொபைல் வாங்க ஆசைப்படுறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
இன்றளவில் செல்போன் இல்லாமல் யாருமே இல்லை. ஏனெனில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நமது அன்றைய வேலைகளை செய்யவும், பொழுதுகளை செலவழிக்கவும், ஒருவரை தொடர்பு கொள்ளவும் என ஒவ்வொரு விஷயத்திற்கும் பிரதானமாக உதவி செய்கிறது. இன்று ரூ.15 ஆயிரத்திற்குள் விற்பனை செய்யப்படும் பட்ஜெட் மொபைல் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
1. Samsung Galaxy F23 5G:
சேம்சங் நிறுவனத்தின் சேம்சங் கேலக்சி எப்23 5ஜி நெட்ஒர்க் வசதியுடன் களமிறங்கியுள்ள ஸ்மார்ட்போன் விலை ரூ.15,599 ஆகும். 2.2 GHz Octa கோர், ஸ்னாப்ட்ரகன் 750G, 4 ஜிபி ரேம், 6.6 இன்ச் அளவு டிஸ்பிளே சிறப்பம்சத்துடன் இயங்கும் சேம்சங் கேலக்சி எப்23 மொபைலில் 50 எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி அளவில் மூன்று கேமராக்கள் உண்டு. 8 எம்.பி அளவில் செல்பி கேமராவும் இருக்கிறது. 5000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.
2. iQOO Z6 Lite 5G:
விவோவின் துணை அமைப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் IQOO Z6 Lite செல்போனில் 5G நெட்வொர்க்குடன் 2GHz Octa கோர், ஸ்னாப்ட்ரகன் 4 Gen 1, 4 ஜி.பி ரேம், 6.68 இன்ச் டிஸ்பிளே, 120 Hz Refresh Rate அமைப்பை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தமட்டில் 50 எம்.பி + 2 எம்.பி கேமராவும், 5 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி திறனும் உள்ளது. இது சந்தையில் ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. POCO M4 Pro 5G:
போகோ நிறுவனத்தின் M4 Pro ரக மொபைல் 5ஜி நெட்ஒர்க் அமைப்புடன் களமிறங்கும் மொபைல் ஆகும். இதில் 2.4 GHz Qcta கோர், 4 ஜிபி ரேம், 6.6 இன்ச் டிஸ்பிளே போன்ற பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. அதேபோல 50 எம்.பி + 8 எம்.பி கேமரா, 16 எம்.பி செல்பி கேமராவும் உள்ளன. 5000 எம்.ஏ.எச் பேட்டரி திறனுடன் செயல்படும் போகோ எம்4 ப்ரோ 5G மொபைல் சந்தையில் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. Realme 9i 5G:
ரியல்மி நிறுவனத்தின் Realme 9i மொபைல் 5G நெட்ஒர்க் சேவையை வழங்கும் திறனுடன் விற்பனை செய்யப்படுகிறது. 2.4 Octa கோர், 4 ஜி.பி ரேம் பெர்பாமன்ஸுடன், 6.6 இன்ச் டிஸ்பிளே உள்ளது. 50 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி கேமராவுடன், 5000 mAh பேட்டரி திறனுடன் செயல்படும் Realme 9i 5G மொபைல் சந்தையில் ரூ.14,830 க்கு விற்பனை செய்யப்படுகிறது.