#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிமெயிலை இப்போ வரை பயன்படுத்தாம இருக்கீங்களா? மொத்தமாக டெலிட் செய்யப்படும் போட்டோஸ்.!
ஜிமெயில் நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை தனது பயனர்களின் கணக்குகளில் செயல்படாத கணக்குகளை கண்டறிந்து நீக்குவது இயல்பானது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் தற்போது வரை செயலில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை கண்டறிந்து, டிசம்பர் 31-ம் தேதிக்கு மேல் அதனை முடக்கும் செயலில் ஜிமெயில் ஈடுபட இருக்கிறது.
உங்களின் ஜிமெயிலில் இருந்து யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை எனினும், நாம் நமது ஸ்மார்ட்போன் மூலமாக ஏதேனும் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் அதன் வாயிலாக நமது ஜிமெயில் கணக்கு உறுதி செய்யப்படும்.
எந்த விதமான செயலும் பதிவு செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் நமது ஜிமெயில் கணக்கு முழுவதுமாக நிர்வாகத்தால் முடக்கப்படும்.
இதனால் நமது தரவுகள் அனைத்தும் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் சேமித்து வைத்துள்ள தொலைபேசி நம்பர், போட்டோ உட்பட அனைத்து தரவுகளும் இதில் அடங்கும்.