பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஹிஸ்டரியை மறைக்க கூகுள் இன்காக்னிடோ டேப் பயன்படுத்துபவரா நீங்கள்?... அதிர்ச்சி தந்த அறிவிப்பு.. உஷாரய்யா உஷாரு.!
எந்த ஒரு விஷயம் குறித்து தேடினாலும், அதற்கு என்னிடம் பதிலே இல்லை என்று சொல்லாத அளவுக்கு தன்னகத்தே பல தகவல்களை திரட்டி வைத்துள்ளது கூகுள்.
கூகுள் குரோம் செயலியில் பலரும் நேரடியாக தங்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து தேடுவார்கள். சட்டவிரோத மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்க்க போன்ற பல சர்ச்சை செயல்களுக்கு பெரும்பாலானோர் Incognito Tab-ஐ பெரும்பாலும் உபயோகம் செய்வார்கள்.
ஏனெனில் அவற்றில் நாம் பார்க்கும் வெப்சைட் ஹிஸ்டரி சேகரிக்கப்படாது. இதனால் பலரும் அதனையே பிரதானமாக உபயோகம் செய்து வந்தார்கள். Incognito Tab அறிமுகம் செய்யப்பட்டதற்கான காரணம் தனியுரிமை சார்ந்த விஷயம் எனினும், பின்னாளில் அது சர்ச்சை செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இனி இன்காக்னிடோ டேப் பயன்படுத்தினாலும், நமது தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் வாயிலாக ஹிஸ்டரியை கண்காணிக்கும் கூகுள், பயனரலுக்கு அது சார்ந்த எச்சரிக்கையும் வழங்கி இருக்கிறது.