#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீங்கள் அனுப்பும் இமெயிலை தானாகவே அழியவைக்க முடியும் தெரியுமா? எப்படி செய்றதுன்னு இங்கே பாருங்க!
கூகுளால் நிர்வகிக்கப்படும் ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையானது இன்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரும் மின்னஞ்சல் சேவையாகும்.
இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன் சாதனங்கள் உட்பட கணினிகளின் ஊடாகவும் பயன்படுத்த முடியும்.
இந்த சேவையில் அடிக்கடி பல புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனம், அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலை உடனடியாக தடுத்துக் கொள்வதற்கான வசதியையும் அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்தது.
அதேபோல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல் குறிப்பிட்ட ஒரு கால எல்லையில் தானாக அழியக்கூடியதாக அமைத்துக்கொள்ளும் வசதியும் ஜிமெயில் செயலியின் புதிய பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள ஜிமெயில் செயலியின் புதிய பதிப்பை பதிவிறக்கிக் கொள்க.
அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதம் அல்லது ஐந்து வருடம் ஆகிய ஏதாவது ஒரு கால எல்லையில் தானாக அழியக்கூடியவாறு அமைத்துக் கொள்ளலாம்.
தானாக அழியக்கூடிய ஒரு மின்னஞ்சலை அனுப்புவது எப்படி?
1. முதலில் ஜிமெயில் செயலியின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்க. (தரவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன)
2. பின்னர் ஜிமெயில் செயலியின் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள பென்சில் அடையாளம் இடப்பட்டுள்ள பட்டனை அலுத்துக.
3. இதன்போது தோன்றும் புதிய மின்னஞ்சலை உருவாக்குவதற்கான ஒரு இடைமுகம் தோன்றும். அதன் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று சிறு புள்ளிகளினாலான பட்டனை அலுத்துக.
4. பின்னர் Confidential mode என்பதை தெரிவு செய்வதன் மூலம், நீங்கள் உருவாக்கும் மின்னஞ்சல் எப்போது காலவதியாக வேண்டும் என்பதை தெரிவு செய்யலாம்.
5. மேற்குறிப்பிட்ட முறையில் காலவதியாகும் கால எல்லையை தெரிவு செய்த பின்னர் வழமை போல் மின்னஞ்சலை அனுப்பலாம்.
இனி நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் காலவதியாகும் கால எல்லையை அடைந்தவுடன் அது தானாகவே நீக்கப்பட்டு விடும்.
எனவே உங்களது தனிப்பட்ட ஆவணங்களை இன்னுமொருவருக்கு தற்காலிகமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம், நீங்கள் மேற்குறிப்பிட்ட முறையில் மின்னஞ்சல்களை அனுப்பும் போது அதனை பெற்றுக் கொள்பவரால் இன்னும் ஒருவருக்கு அனுப்பவோ, டவுன்லோட் செய்யவோ அல்லது அதில் உள்ள தகவல்களை காப்பி (COPY) செய்யவோ முடியாது.