53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வாட்ஸ் அப்பில் ஷெட்யூல் மெசேஜ் அனுப்புவது எப்படி? இதோ எளிமையான வழி
உலகம் முழுவதும் மொபைல் போனின் மூலம் தகவல்களை அனுப்புவதில் முன்னணி செயலியாக இருந்து வருகிறது வாட்சப். பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்ஸப்பினை உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வாட்சப் நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கி கொடுப்பதுதான்.
அந்த வகையில் வாட்சப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை உடனே அனுப்ப வேண்டிய அவசியமில்லை நாம் அதனை தயார் செய்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அந்த நபருக்கு அனுப்புவது போன்று ஷெட்யூல் செய்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு நம் நண்பருக்கு நள்ளிரவு 12 மணியளவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்ப வேண்டுமெனில் அதற்காக நாம் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய அவசியமில்லை. 12 மணிக்கு தானாகவே வாழ்த்துக்களை அனுப்பும்படி முன்கூட்டியே அதனை பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலம் சரியாக 12 மணிக்கு நாம் அனுப்ப வேண்டிய வாழ்த்து நண்பருக்கு சென்றுவிடும்.
ஆனால் தற்பொழுது இந்த வசதியானது நேரடியாக வாட்ஸ்அப்பில் இடம்பெறவில்லை. இந்த வசதியைப் பயன்படுத்த மூன்றாம்தர செயலிகள் சிலவற்றை பயன்படுத்தலாம். இவற்றிற்கு அனுமதி அளிக்கும் விதமாக வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த வாட்ஸ்அப் ஷெட்யூலர், டு இட் லேட்டர், ஸ்கெட் இட் போன்ற பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும். இலவச பதிப்பிலேயே பல்வேறு அம்சங்கள் இருப்பினும், கட்டண செயலிகளில் மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷெட்யூல் செய்ய முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை எப்படி ஷெட்யூல் செய்வது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
தேவையானவை:
வாட்ஸ்அப் ஷெட்யூலர் செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
செட்டிங்ஸ் ஆப்ஷனில் Accessibility -> Services வசதியை இயக்க அனுமதிக்க வேண்டும்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1 - வாட்ஸ்அப் ஷெட்யூலர் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஏ.பி.கே. ஃபைல் மூலம் வலைதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2 - இன்ஸ்டால் ஆனதும் செயலியை திறக்க வேண்டும்.
3 - செயலியின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - இனி வாட்ஸ்அப் காண்டாக்ட் அல்லது வாட்ஸ்அப் க்ரூப் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
5 - அடுத்து குறுந்தகவலை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
6 - இனி குறுந்தகவலை டைப் செய்ய வேண்டும்.
7 - இறுதியில் க்ரியேட் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்தால் உங்களது குறுந்த்கவல் ஷெட்யூல் ஆகிவிடும்.