53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
100% சார்ஜ் ஆனா உடனே போன் சார்ச்சரை கழட்ட கூடாது! ஏன் தெரியுமா?
சார்ஜ் ஏறும் பொது போனில் பேசியதால் ஒருவர் மரணம், இரவில் தூங்கும்போது சார்ஜ் போடு தூங்கியவர் தூங்கும்போது மரணம். இதுபோன்று நம்மை பயமுறுத்தும் பலவிதமான செய்திகளை கேள்விப்பட்டிருப்போம்.
இதுபோன்று செய்திகளை கேட்டு பயந்து போய் இருக்கீங்களா? அப்டினா இனி நீங்க பயப்பட தேவ இல்ல.
பொதுவாக இரவில் சார்ஜ் செய்யும் அணைத்து ஸ்மார்ட் போன்களும் வெடிப்பதில்லை. சில போன்கள் வெடிப்பதற்கு காரணம் அந்த போனின் தரம் மற்றும் நாம் சார்ஜ் செய்யும் முறை. நாம் சரியான முறையில் சார்ஜ் செய்தால் போன்கள் வெடிப்பதை தவிர்க்க முடியும்.
அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும்.!
போன்களுக்கு சார்ஜ் செய்வது பற்றி பல்கலைக்கழகம் ஓன்று அறிவுரை கூறியுள்ளது. அதாவது போனிற்கு ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்ய வேண்டுமாம். அவ்வாறு பலமுறை சார்ஜ் செய்வதால் பேட்டரியின் திறன் பாதுகாக்கப்பட்டு, அதன் ஆயுள் கூட்டுகிறதாம்.
10% அல்லது 20% வரை மட்டுமே.!
10 அல்லது 20% நிரம்பியதும் கூட உங்கள் போன் சார்ஜரை கழட்டிவிட்டு நீங்கள் உங்கள் போனை உபயோகப்படுத்தலாம். சார்ஜ் குறைந்ததும் மீண்டும் உங்கள் போனை குறைந்த அளவில் சார்ஜ் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்த தொடங்கலாம். இவாறு செய்வதனால் உங்கள் போன் அல்லது பாட்டரி எந்த விதத்திலும் பாதிக்காதாம்.
சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம்.!
மேலும், 'உங்கள் பேட்டரியின் வாழ்நாளை நீடிக்க விரும்பினால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள 15 சதவிகிதம் என்கிற சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம். ஒரு 65% மற்றும் 75% என்பதற்கு இடையே சார்ஜ் புள்ளியை வைக்க முயற்சி செய்யுங்கள்' என்றும் பேட்டரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம்.!
10 முறை 10-10% சார்ஜ் செய்தால் கூட பரவாயில்லை ஆனால் ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். முடிந்த அளவு 95% என்கிற புள்ளியில் நிறுத்திக்கொள்ளவும். ஏனெனில், இன்றைய நவீன லித்தியம்-அயன் பேட்டரிகள் 'முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை, அது தேவையானதும் இல்லை'.
சார்ஜரை கழட்ட வேண்டாம்.!
மேலும் வெளியான வலைத்தள அறிக்கையின்படி, ':அதிக அளவிலான வோல்டேஜ் பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். ஆக அதிக நேரத்திற்கு சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளது. ஒருவேளை, 100% சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜரை அவசர அவசரமாக கழட்ட வேண்டியதில்லை என்றும் பரிந்துரைக்கிறது.