நம்ம ஊரு ஏர்போர்ட் தானா இது?!,..வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணிகள் திகைப்பு..!



introducing-2-robots-to-assist-passengers-at-coimbatore

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, இலங்கை  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமன்றி டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை  உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து தினமும் 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில், தானியங்கியாக செயல்படும்  செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

இந்த ரோபோகளிடம் இருந்து பயணிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ல இயலும் என கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.  மேலும் கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த ரோபோக்கள் வேறு எவருடைய உதவியும் இன்றி தானே நகரும் தன்மை கொண்டது என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.