#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் புரட்சியில் இறங்கிய ஜியோ நிறுவனம்! இந்தியர்களுக்கென தனி புதிய செயலி
இந்திய இணைய சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கு இன்றியமையாதது. இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் இன்று இணைய சேவை பரவியிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜியோ நிறுவனம் தான். ஜியோ நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெகுவாகக் குறைந்தன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் இந்தியர்களுக்கென பிரத்தியேகமான ஒரு இணைய தேடுதல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஜியோ ப்ரவுசர் (JioBrowser) என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மற்ற செயலிகள் போல பிலே ஸ்டோரில் அனைவராலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் இதனை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேடுதல் செயலியானது தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஐஒஸ் பயனாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்தியர்களின் பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் தேடுதல் செயலி இதுவே ஆகும். வெறும் 4.8 எம்பி செயல்திறனை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த தேடுதல் செயலியை இந்தியாவின் முக்கிய 8 மொழிகளான தமிழ், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பயன்படுத்தலாம்.செயலியில் இருக்கும் செட்டிங்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் இந்த தேடுதல் செயலியும் முகப்பு பக்கத்தில் அனைத்துவிதமான செய்திகளும் தோன்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோமில் உள்ள incognito மோடை போன்று பயனாளர்கள் ரகசிய முறையில் இணைய தேடுதலை செய்வதற்கு வசதி உள்ளது. மேலும் வெறும் எழுத்துக்களை கொண்டு மட்டுமல்லாமல் குரல் வடிவிலும் பயனாளர்கள் தங்களது தேடுதலை இணையத்தில் பதிவு செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.