மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜியோவின் அதிரடி இலவச ஆப்பர்!! துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!!
ஜியோ நிறுவனம் தொலைபேசி துறைக்குள் காலடி வைத்ததில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து அணைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ நிறுவனம்.
2016-ம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. ஜியோ வந்த பிறகு சில தொலைத்தொடர்பு நிறுவனம் காணாமல் போனது. ஜியோ வந்த பிறகுதான் அணைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களும் கட்டண விலையை குறைக்க தொடங்கியது. இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.
ஜியோ செலபிரேஷன் என்னும் பேக்கேஜில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அந்த டேட்டா 4 நாட்களுக்கு மொத்தம் 8 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செலபிரேஷன் பேக் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் ஜியோ மொபைல் எண்ணிற்கு இந்த ஆஃபர் கிடைத்துள்ளா என்பதை ஜியோ செயலியில் மை ப்ளான்ஸ் பகுதிக்குள் சென்று தெரிந்துக்கொள்ளாம். அல்லது 1299 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தும் தெரிந்துகொள்ளலாம்.