மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இது புதுரகமால்ல இருக்கு.. மஞ்சள் நிறத்தில் களமிறங்கும் ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ்..! கண்ணைக்கவரும் மாடல்கள் வைரல்..!!
ஆப்பிள் நிறுவனம் உலகளவில் தனது சந்தையை விரிவுபடுத்தி ஒவ்வொரு ஆண்டும் பயனர்களின் தனி உரிமையை கருத்தில்கொண்டு சிறப்புடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் முதன்மையானதாகும். இந்நிறுவனம் தற்போது ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செல்போன்கள் மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மிட்நைட், ஸ்டார்லைட் ப்ராடக்ட் ரெட், ப்ளூ போன்ற பல நிறங்களில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு புதிய நிறங்களை அறிமுகக் செய்யவில்லை. ஐபோன் 13 மாடல்களை பொறுத்தவரையில், ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் ஆல்ஃபைன் கிரீன் நிறத்தில் விற்பனை செய்யப்பட்டன.
ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களின் விலை இந்திய மதிப்பில் ரூ.69,999 மற்றும் ரூ,79,999, ரூ.89,999 என நிறம் மற்றும் அதன் இயங்குதலங்களை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் 10-ஆம் தேதி ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மஞ்சள் நிற மாடல்களில் செல்போன் விற்பனை தொடங்குகிறது.