#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
OnePlus 8T செல்போனால் நொந்துபோன வாடிக்கையாளர்.. மனம் குமுறி முகநூலில் பரபரப்பு ஆதங்கம்.! வைரல் பதிவு..!
OS அப்டேட் என்ற பெயரில் OnePlus வைத்த ஆப்பால் நொந்துபோன வாடிக்கையாளர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
செல்போன் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் OnePlus நிறுவனம், இந்தியாவில் கடந்த 16 அக் 2020ல் தனது OnePlus 8T ரக செல்போனை அறிமுகம் செய்தது. இந்த போன் பலரிடம் வரவேற்பு பெற்றது. அதன் கேமரா தரம், இயங்குதிறன் போன்று பல காரணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து விளம்பரப்படுத்தப்பட்டதால் பலரும் OnePlus 8T ரக செல்போனை வாங்கி குவித்தனர்.
இந்த நிலையில், இந்த செல்போன் வைத்திருப்பவர்களுக்கு OS Update என்ற அமைப்பை அந்நிறுவனம் கொடுத்த நிலையில், OS Update செய்த பலருக்கும் பேரதிர்ச்சியாக டிஸ்பிளேயில் பச்சை நிற கோடு நேராக விழுந்தது. முதலில் செல்போன் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பு என பலரும் தனது குறையாக இருக்கும் என எண்ணினார்கள்.
ஆனால், ஒரே பாதிப்பு OnePlus 8T உபயோகிப்பாளருக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு அதிர்ச்சியை தந்தது. இது தொழில்நுட்ப கோளாறு என்பதை மக்கள் புரிந்துகொண்ட நிலையில், OnePlus 8T உபயோகிப்பாளர்கள் பெரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த பச்சை நிற கோடு மெல்ல மெல்ல என ஒவ்வொரு இடமாக பரவ தொடங்கியதால் பயனர்கள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
முகநூல் பக்கத்தில் தேவகுமார் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "இனி OnePlus 8T போனை பெட்ரோல் ஊற்றி கொளுத்த வேண்டும். Samsung Galaxy மொபைலில் வீடியோ எடுத்து பதிவிட்டு வந்தேன். கேமரா தரம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நண்பனின் பேச்சை கேட்டு ரூ.50 ஆயிரம் செலுத்தி OnePlus 8T வாங்கினேன்.
செல்போன் வாங்கிய சில மாதங்கள் நன்றாக இருந்தது. வீடியோ தரமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். இதற்கிடையில், OS அப்டேட் என்பது வந்தது. நானும் நம்பி OS அப்டேட் செய்தேன். ஒரே வாரத்தில் பச்சை நிற கோடு வந்தது. நமது தவறாக இருக்கலாம் என எண்ணினேன். கோடு இரண்டு நாளானது, நான்கு எட்டாகி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பச்சை நிற கோடு விழும் இடத்தில் டச் செய்யப்படவில்லை. சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்றால் செல்போன் எலிஜிபிலிட்டி சோதனை செய்ய ஒருமாதம் ஆகும். எலிஜிபிலிட்டி இருந்தால் நாங்கள் சரி செய்வோம்., இல்லையேல் பணம் தர வேண்டும் என்கிறார்கள். OnePlus Care க்கு சென்று Complaint செய்தால் அவர்கள் வந்து வாங்கி செல்லவும் ஒரு மாதம் ஆகுமாம்.
செல்போனை தரமாக உற்பத்தி செய்து உருப்படியாக கொடுக்காதது உங்களின் தவறு. நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் எதற்காக அலைய வேண்டும்?. கைக்காசு போட்டவாவது டிஸ்பிளே சரி செய்யலாம் என பார்த்தால் ரூ.14 ஆயிரம் கேட்கிறார்கள்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இன்றளவில் பல நிறுவனங்களின் தங்களின் போட்டி மனப்பான்மையால் தரம் என்ற விஷயத்தில் கோட்டைவிட்டு நம்மை சோதனைப்பொருளாதாக உபயோகம் செய்கிறார்கள் என்ற அச்சம் தான் பலருக்கும் வெளிப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் மாடலில் உள்ள ஒருசெல்பொன் கூட ஒரே வருடத்தில் மதர்போர்ட் பிரச்சனை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய எலக்ட்ரானிக் சந்தை விற்பனை மையமா? சோதனை மையமா என்பது கேள்வியாக அமைகிறது. எது எப்படி இருந்தாலும் பாதிப்பு என்னவோ சாமானியனுக்குத்தான்.