மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்கள் செல்போன் சூடாகுதா?.. என்ன காரணமாக இருக்கலாம்?.. ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
நாம் இன்றளவில் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்கள் சில நேரங்களில் அதிகளவு வெப்பத்தில் காணப்படும். இது நீண்ட நேரம் அதனை உபயோகம் செய்வதால் ஏற்படும்.
ஆனால், நாம் சாதாரண நிலையில் வைத்திருக்கும்போது செல்போன் சூடானால் அது ஆபத்திற்கான அறிகுறி ஆகும். 15 நிமிடத்திற்கு மேல் நாம் கேம் விளையாடிய பின் வெப்பமான உணர்வு ஏற்படும் பட்சத்தில் பிரச்சனை இல்லை.
நமது செல்போன் இயற்கையாக எப்போதும் அதிக சூட்டுடன் காணப்பட்டால், அது தரமற்று இருக்கலாம். அல்லது ஹேக் செய்யப்பட்ட பின்னர் திரைமறைவில் இயங்கும் செயலிகளால் சூடாகும்.
இதனால் நமது செல்போனில் இருக்கும் தேவையற்ற செயலிகளை நீக்கம் செய்ய வேண்டும். மொபைல் பழைய அப்டேட்டில் இருந்தால், அதனை மாற்றி நிறுவ வேண்டும்.
அதேபோல, ஒரே நேரத்தில் தொடர்ந்து பல செயலிகளை உபயோகம் செய்தலை தவிர்க்க வேண்டும். சார்ஜ் செய்யும் போது செல்போன் எப்போதும் சூடாகும் பட்சத்தில், நமது சார்ஜரை மாற்றுவது நல்லது.
தேவையான நேரம் தவிர்த்து பிற சமயங்களில் நாம் ஆன் செய்துள்ள டேட்டா, புளூடூத், வைபை அமைப்புகளை ஆப் செய்து வைக்க வேண்டும்.