திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Southern Railway முகநூல் பக்கத்தை திருடி, தமிழக பயனாளர்களிடம் உரையாற்றும் ஹேக்கர்.. கமெண்ட் பிரிவில் கலாய் சம்பவங்கள்.!
விளையாட்டு விளையாட்டாக இருக்க வேண்டும் என்ற வடிவேல் பாணி தொடர்ந்தால் பிரச்சனை இல்லை, மாறினால் சோகம் தான்.
நமது தொழில்நுட்பம் நமக்கு தேவையான வளர்ச்சி, கருத்துக்கள், தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றன. ஆனால், அவை குற்றங்கள் செய்யும் நபர்களால் தவறாகவும் உபயோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், சமீபத்தில் நாம் அதிகளவிலான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டன என்பதை அதிகம் கேள்விப்பட்டு இருப்போம்.
சமூகத்தில் முக்கியஸ்தர்களாக கவனிக்கப்படும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், அரசுத்துறை அதிகாரிகள் போன்றோரின் சமூக பக்கங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் இருக்கும் ஹேக்கர்களால் திருடப்படும்.
பின்னர் இவை அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு மீண்டும் செயலாக்கப்படும். இந்த நிலையில், தென்னிந்திய இரயில்வே முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நேற்று இது நடந்ததாக தெரியவருகிறது.
ஆனால், தற்போது வரையில் அப்பக்கம் மீட்கப்பட முடியவில்லை. இதற்கிடையில், ஹேக்கர் அதன் கமெண்டுகளுக்கு தனது பதிலை வியட்னாம் மொழியில் வழங்கி வருகிறார். அவருடன் நம்ம ஊரு நெட்டிசன்கள் பயமின்றி உரையாடி வருகின்றனர்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் மீம் வடிவில் பார்த்து பழகிப்போன நம்ம ஊர் காளையர்களுக்கு ஹேக்கிங்கும் பெரிய விஷயமாக தோன்றவில்லை. ஹேக்கர் அவரின் பணியை நமது பக்கம் திருப்பினால் விளைவு விபரீதமாகிவிடும் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.